(தத்துவம்)லாவோ ட்சு (தமிழில்: சி. மணி)
இரண்டாம் பதிப்பு 2009
பக்கங்கள் : 130
ISBN 978-81-85602-96-7
விலை: ரூ. 175 + அஞ்சல் செலவு
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பைபிளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. தாவோயிசச் சிந்தனையை வெளிப்படுத்தும் அடிப்படை நூல் தாவோ தே ஜிங்.இன்றைய உலகுக்கு மிகவும் பொருத்தமான நூல்.
ஆக்கிரமிப்புக்கான போரையும், மரண தண்டனையையும் தவிர்ப்பது, முற்றிலும் எளிமையாக வாழ்வது, தீவிர அதிகாரத்தை வற்புறுத்த மறுப்பது என்று மூன்று வழிகளில் நடைமுறைக்கும் அரசியலுக்கும் உரிய பரிமாணத்தை வகுக்கும் தாவோயிசம் தனிமனித நலம்,சமூக இணக்கம், பிரக்ஞையின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
தாவோ தே ஜிங் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை.