|
"உலகம் முழுவதுமே பண்பாடு, அறிவு, கலைரீதியான முயற்சிகள் எல்லாம் ஒரு நூலில்தான் தொங்குகின்றன. அந்த நூல், மிகச் சிறந்த ரசனை, புரிதல், கற்பனை, நிஜத்தில் எதையும் சாதிக்கும் வலிமை கொண்ட சிலரிடம்தான் இருக்கிறது. அந்த சிலரில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக அவரும் அவருடைய பதிப்பகமான க்ரியாவும் சென்னையில் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவுசார்ந்த படைப்புகளின் மையமாக விளங்குகிறது. சிங்கப்பூர், இலங்கை, ஃபிஜி, டொரன்டோ போன்ற பரந்துபட்ட தமிழ் வாசிப்புலகிலும் அவரது தாக்கம் இருந்தது. ராம் உருவாக்கிய க்ரியா தற்காலத் தமிழகராதி, நவீன தெற்காசிய மொழிகளில் தற்போது வெளிவந்துள்ள மிகச் சிறந்த அகராதிகளில் ஒன்று. ராம் எனக்கு நல்ல நண்பர். எனக்கு மட்டுமல்ல, தமிழோடு தொடர்புடைய எல்லோருக்கும் நண்பர். அவருடைய மறைவு, கற்பனைக்கெட்டாத பேரிழப்பு"
|
|
“The dictionary was his major work; it was remarkable and was perhaps the kind of work that has not been done in most other South Asian languages. It is possibly the finest contemporary dictionary,”
|
|
|
ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டியது க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி. இது வளரும் தமிழுக்கு ஒரு வளாமான அகராதி |
|
1974ஆம் ஆண்டு ஆரம்பித்த க்ரியா பதிப்பகம் சமூக அக்கறையுடன், வாசகர்களின் அறிவு வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் ஒரு தூண்டு கோலாக இயங்கி வருகிறது. தமிழ், ஆங்கிலம், மற்றும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்ப்புகளையும் செய்து வெளியிடுகிறது. பல தரமான எழுத்தாளார்களின் படைப்புகளை கொண்டாடும் விதத்தில் உயரதரமான எழுதுருப்புகளையும், பத்தி அமைப்பையும், மொழியை செம்மை படுத்தும் விதத்தில் அமைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது.
க்ரியா அகராதி உருவாக்கத்தில் அனைத்து சொற்களையும் உள்ளடக்கிய சொல்வங்கியில் இருந்து தேர்ந்தெடுக்க பட்ட தற்கால தமிழ் வார்த்த்கைகளை பல துறை வள்ளுனர்களின் உதவியுடன் தற்கால தமிழுக்கென்று ஒரு அகராதியை (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 1992ஆம் ஆண்டு வெளியிட்டது. தொடர்ந்து புதிய சொற்களை ஆய்வு செய்து 2008ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பை வெளியிட்டது. இச்செய்முறையில் தொடர்ந்து அயராது பணியாற்றி மூன்றாம் பதிப்பை 2020இல் வெளியிட்டது, 2012ஆம் ஆண்டு காக்னிசென்ட் (Cognizant Technology Solution) நிருவன பங்களிப்புடன் இந்திய பார்வையற்றோர் சங்கத்திற்கு ப்ரெயில் (Brail) முறையில் இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழில் அகராதி வெளியிட்டது. மேலும் சிங்கப்பூர், மலேசியா அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க 2010ஆம் ஆண்டில் தமிழ்-தமிழ் அகராதியை உருவாக்கி தந்தது.
க்ரியா இதுவரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், ப்ரென்ச், ஜெர்மன் மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கும், அதிக படியான மொழிபெயர்ப்புகளை செய்திருக்கிறது. மேலும் நாடகம், கவிதை, இலக்கியம், சமயம், தத்துவம், பண்பாட்டியல், பொருளாதாரம், கைவினை, சுற்று சூழல், ஆய்வு கட்டுறைகள், ஊடகவியல், மொழியியல், வாழ்கை வரலாறு, திரைபடம், தொல்பொருளியல், நாட்டு புறவியல், நெடுங்கதைகள், சிறுகதைகள், நாவல்கள், மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிடுகிறது.
இரண்டு முறை தன் வெளியிடுக்கு சாகித்ய அகடமி விருது பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டு அரசின் "சிறந்த பதிப்பகம்" விருது பெற்றது.
வெளியீட்டுகளுக்கு SRM தமிழ் பேராய விருதுகள் பெற்றிருக்கிறது.
க்ரியா ராமகிருஷ்ணனின் இழப்பு பேரிழப்பாக இருந்தாலும் அவர் விட்டு சென்ற பணிகளை அவருடன் பணியாற்றிய அதே குழு மூலம் இதே துறையில் தொடர்ந்து பணியாற்றி அகராதி பணியில் அகராதி பணியில், தாவரவியல், விலங்கியல், தொழில் சார்ந்த அகராதிகள், மற்றும் ஆங்கில-தமிழ் அகராதி வெளியிடுவதை முன்னெடுத்து மும்முறமாக இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் புதிய எழுத்தாளார்களுக்கான வாய்ப்புகான மேடையாகவும் இயங்குகிறது. கடைசி மூச்சு வரை இயங்கிய அவர் அடைய நினைத்ததை பரவலாக மக்களிடம் எடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறப்பாடங்களில் வரும் வார்தைகளை புரிந்து தவறின்றி எழுதவும், படிக்கவும் தற்கால தமிழ் (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) அகராதி மாணவர் பதிப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதை தமிழக அரசின் உதவியுடன் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முனைப்பாக செயல் பட்டு வருகிறது. இதுவே க்ரியாவின் இலக்கு.